தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : மக்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில்  வரும் (23.11) திகதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், மேலும் இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை