நிதியமமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
#SriLanka
Dhushanthini K
8 months ago

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மகிந்த சிறிவர்தன இன்று (20.11) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியைப் பெறுவதற்கும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றியடையச் செய்வதற்கும் அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.
அவர் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவும் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.



