முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது! (photo)
#SriLanka
#Arrest
#Harin Fernando
Mayoorikka
1 year ago
பதுளை நகரில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதி தேர்தல் காலத்தில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன்போது முன்னாள் அமைச்சர், தான் அணிந்திருந்த ஆடையை கழட்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.