விசா இன்றி தங்கியிருந்த 08 பேர் கைது!

#SriLanka #Visa
Dhushanthini K
8 months ago
விசா இன்றி தங்கியிருந்த 08 பேர் கைது!

குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 8 வெளிநாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க ஆண்டியம்பலம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆண்டிஅம்பலம் (Andiambalam) பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் முறையான விசாக்கள் இன்றி வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த குழுவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!