பசறை – பிபில பிரதான வீதியில் மண்சரிவு : சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்க!

#SriLanka
Dhushanthini K
9 months ago
பசறை – பிபில பிரதான வீதியில் மண்சரிவு : சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்க!

பசறை – பிபில பிரதான வீதியின் 13 ஆம் தபால் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீதியில் விழுந்த கற்கள் மற்றும் மண்ணை அகற்றும் பணி இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதனால் அவ்வீதியில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இதனிடையே, நிலச்சரிவு அந்த இடத்தில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. பசறை - பிபில பிரதான வீதியின் 13 ஆம் அஞ்சல் பகுதியில் நேற்று (18) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மண்சரிவினால் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்துள்ளதுடன் வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. 

நிலச்சரிவு காரணமாக, பிரதான வீதியின் 13 ஆவது போஸ்ட் பகுதியில் பெரிய கற்கள் வீதியில் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!