ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதாகவுள்ள இரண்டு பிரபலங்கள்!

#SriLanka #Arrest
Mayoorikka
9 months ago
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதாகவுள்ள இரண்டு பிரபலங்கள்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய, முன்னாள் பாதுகாப்புத் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், கடந்த காலங்களில் சனல் 4 தொலைக்காட்சியில் அம்பலப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானாவிடம் அது தொடர்பாக ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

 அதற்கமைய, இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சனல் 4 காணொளி தொடர்பாக, கடந்த அரசாங்கம் முன்னாள் நீதிபதி இமாம் தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்து விசேட அறிக்கையொன்றையும் வழங்கியுள்ளது.

 ஆனால் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!