புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது!
#SriLanka
Dhushanthini K
9 months ago

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.



