IMF இன் பிரதிநிதிகளை சந்தித்த அனுர : மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பு!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
IMF இன் பிரதிநிதிகளை சந்தித்த அனுர : மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18.11) இடம்பெற்றது. 

 இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க X செய்தியில் தெரிவித்துள்ளார். 

 மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டக்கூடிய சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தை தாம் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி கூறுகிறார். 

 சிறுவர் வறுமை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைத் தீர்ப்பது, விசேட தேவையுடையோருக்கு ஆதரவளிப்பது மற்றும் கடுமையான சீர்திருத்தங்களின் ஊடாக ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பன தமது இலக்குகளாகும் என ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தார்.

IMF திட்டம், நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. IMF குழு ஒத்துழைப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்ததுடன், அவர்களின் தீர்க்கமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை வாழ்த்தியது. 

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, ஆணையை நிலைநிறுத்தும் பொறுப்பை தமது நிர்வாகம் உரிய முறையில் நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார். 

 மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, குடிமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு சமநிலையான அணுகுமுறையைப் பேணுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக்கொண்டார். 

 இங்கு, தனது தலைமையின் கீழ், சமூக செலவின ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படும் என்றும், குழந்தைகளின் வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்துஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் முடிவடைந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் வெற்றியுடன் ஆணை சூழலைப் புரிந்துகொண்டு இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைக்கத் தயார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை