தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற விபத்து : இருவர் வைத்தியசாலையில்!
#SriLanka
#Accident
Thamilini
1 year ago
ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக. இன்று (18.11) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.