முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்த IMF குழுவினர்!
#SriLanka
#Ranil wickremesinghe
Thamilini
1 year ago
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று மல்பாறையில் உள்ள அலுவலகத்தில் வைத்து குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததாக தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர், கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை யதார்த்த நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் ஆற்றிய பணியை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.