விஜித ஹேரத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
#SriLanka
Thamilini
1 year ago
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவர் முன்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.
மேலும், முன்னர் 2004-2005 இல் அப்போதைய அரசாங்கத்தில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராக பணியாற்றினார்.
இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டதாரியாவார்.