மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை
#SriLanka
Mayoorikka
1 year ago
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன நாளை (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.