பதுளை - பசறை பகுதியில் மண்சரிவு : போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது!

#SriLanka #Land_Slide
Thamilini
1 year ago
பதுளை - பசறை  பகுதியில் மண்சரிவு : போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது!

பதுளை - பசறை லுனுகல A5 வீதியின் 13 ஆம் இலக்கத்தில் ஒட்டேக்கடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

 கற்கள், மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் சுமார் 60 மீற்றர் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 வீதி மறியல் காரணமாக பதுளையில் இருந்து பிபில, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை, மஹாஓயா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மண்சரிவினால் பாரியளவில் சேதமடைந்துள்ளன. 

 முச்சக்கர வண்டி விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது வீதி அபிவிருத்தி அத்தியட்சகர் பசறை பிரதேச சபை பொலிசார் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை