புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று!

#SriLanka
Dhushanthini K
9 months ago
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று!

புதிய அமைச்சரவை இன்று (18) பதவியேற்கவுள்ளது. 

 புதிய அமைச்சரவை இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 கேபினட் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இங்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

 புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 25 ஆக இருக்கும். தேசிய மக்கள் சக்தி கட்சியும் பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என முடிவு செய்துள்ளது. 

 இதன்படி புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க, மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுடன் முன்னோக்கி செல்வதற்கு தானும் எம்பிக்கள் குழுவும் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!