நுகர்வோர் விவகார அதிகாரசபை கலைக்கப்பட்டுள்ளது!

#SriLanka
Dhushanthini K
9 months ago
நுகர்வோர் விவகார அதிகாரசபை கலைக்கப்பட்டுள்ளது!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நீக்கப்பட்டு, திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்திற்கு முரணான வகையில் கடந்த அரசாங்கம் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரை நியமித்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பிரிவு கலைக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிதியமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின்றியே உரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த நியமனங்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் தற்போதைய தலைவர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் வினவியபோது அவ்வாறான நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு நியமிக்கப்பட்ட ஊடக அதிகாரியும் தற்போதைய தலைவரால் நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வர்த்தக அமைச்சர் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நியமனங்கள் தொடர்பில் தற்போதைய தலைவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!