புதிய அரசாங்கத்தின் பதவிப்பிரமாணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
Dhushanthini K
9 months ago

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை நவம்பர் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது வரும் 21ம் திகதி மதியம் 12:00 மணிக்கு நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை காலை 11.30 மணிக்கு சமர்ப்பிப்பார்என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.



