விசேட புகையிரத சேவைகளை அமுல்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Train
Thamilini
1 year ago
விசேட புகையிரத சேவைகளை அமுல்படுத்த நடவடிக்கை!

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு வரும் பயணிகளுக்காக சில சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி  இன்றும் (17) நாளையும் (18) வழக்கமான ரயில் நேரங்களுக்கு மேலதிகமாக சில விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி, 7 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியாத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் நேரங்கள் இயங்குகின்றன.

 அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை