தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்த வெளிநாட்டு குழுவினரின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
#SriLanka
#Election
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலை அவதானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைய வளாகத்தில் தேர்தல் ஆணையத்திடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் குழுவொன்று இந்த ஆண்டு பொதுத் தேர்தலை அவதானிப்பதற்காக தீவுக்கு வந்திருந்தது.
அதன்படி, தேர்தலுக்கு முந்தைய காலம், தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய காலகட்டம் போன்றவற்றில் அவர்கள் தமது அவதானங்களை முன்வைத்துள்ளனர்.