வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனடிய தபால் பணியாளர்கள்

#Canada #Protest #Workers #Postal
Prasu
11 months ago
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனடிய தபால் பணியாளர்கள்

கனடிய தபால் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தொழிற்சங்கத்திற்கும் தொழில் தருனருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படாத காரணத்தினால் இந்த வேலை நிறுத்தம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனடிய தபால் திணைக்களத்தைச் சேர்ந்த 55000 பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடாவில் விடுமுறைக் காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது சிறு வியாபார நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 பணிப் புறக்கணிப்பு அல்லது தொழிற்சங்கப் போராட்டத்தினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!