புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 03 நாள் செயலமர்வு!
#SriLanka
#Parliament
Thamilini
1 year ago
10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வு நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய எம்.பி.க்கள் பதிவு நவம்பர் 18 முதல் 20 வரை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் நவம்பர் 18 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதிகாலை 10 மணிக்கு கூடுகிறது.