பொதுத் தேர்தலில் விசேட வெற்றி! ஜனாதிபதிக்கு இந்திய தூதுவர் வாழ்த்து
#SriLanka
#Election
Mayoorikka
9 months ago

பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
அருகிலுள்ள ஜனநாயக நாடாக தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன் இருநாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



