புகையிரதத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!
#SriLanka
#Accident
Dhushanthini K
9 months ago

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சைக்களின் பின்பக்கத்தில் பயணித்த நபர் உயிரிழந்த நிலையில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரன பெல்லங்காடவல பக்க வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கினிஹிரிகம, கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



