தம்புள்ளை - மஹியங்கனை பகுதியில் கோர விபத்து : மூவர் பலி, 39 பேர் வைத்தியசாலையில்!
#SriLanka
#Accident
Dhushanthini K
9 months ago

மாத்தளை, எலவகந்த பிரதேசத்தில் இன்று (14) மாலை பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எலவகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் இருந்த 37 பேரும் வேனில் இருந்த 05 பேரும் படுகாயமடைந்து வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் பேருந்தில் இருந்த இருவர் மற்றும் வேனில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



