தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியில் ஊர்வலம் செல்ல தடை!
#SriLanka
Thamilini
1 year ago
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று பேணப்பட்ட அமைதியான சூழல் தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக புரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. எதிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. நடந்து சென்றோ அல்லது வாகனங்களில் சென்றோ, முடிவுகளைப் பார்க்கும்போது, பொதுமக்கள் கூடிவர அனுமதிக்கப்படாத இடங்களை டிஜிட்டல் ஸ்கிரீன்களைப் பயன்படுத்தி அகற்றி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.