இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட படகு : 06 பேர் கைது!
#SriLanka
Dhushanthini K
9 months ago

இலங்கை கடற்படையினரால் இலங்கைக்கு மேற்கே உயர் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்து 60 கிலோ போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள்களுடன் கூடிய இழுவைப்படகு மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கடற்படையினரால் கரைக்கு கொண்டு செல்லப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.



