20இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து!
#SriLanka
#Train
Dhushanthini K
9 months ago

புகையிரத சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் குறைந்தது பத்து புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ரயில் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (13.11) மேலும் 22 ரயில் சேவைகள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொறுப்பான அதிகாரிகளால் தேவையான எண்ணிக்கையில் ரயில் ஓட்டுனர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க முடியாவிட்டால் இந்த நடைமுறை தொடரும்.
இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.



