கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச்சூடு : இளைஞர் ஒருவர் பலி!
#SriLanka
#GunShoot
Thamilini
1 year ago
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 30 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சந்தேக நபர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் ஊடாக இந்த சம்பவம் தொடர்பில் மவுண்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.