அமைச்சர்களின் ராஜ போக வாழ்விடங்களை அரச சுற்றுலா துறையாக மாற்றும் அனுரா
#SriLanka
#Minister
#President
#AnuraKumaraDissanayake
Prasu
1 year ago
அமைச்சரவை அமைச்சர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை சுற்றுலா வாசஸ்தலங்களாக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அந்த வீடுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து அமைச்சரவையின் கருத்தை பொதுநிர்வாக அமைச்சு கேட்கவுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு கொழும்பில் குடியிருப்புகள் கிடையாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.