சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு

#Switzerland #Job Vacancy #Foriegn #Workers
Prasu
1 month ago
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு

சுவிட்சர்லாந்தில், சுமார் 1.12 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் எந்தெந்த துறைகள் வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குகின்றன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்தில் பணி வழங்கும் பல நிறுவனங்களுக்கு, தகுதியான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது, கடந்த சில ஆண்டுகளாகவே கடினமாக உள்ளது. பல துறைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கான பொருத்தமான பணியாளர்களை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது.

ஆகவே, பல நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை பணிக்கமர்த்துகின்றன. என்றாலும், அவை பெரும்பாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களையே பணிக்கமர்த்துகின்றன என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

ஆனாலும், மூன்றாம் நாடுகளிலிருந்தும், குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து, தொழில்துறை நிபுணர்களை பணிக்கமர்த்துவதும் சுவிட்சர்லாந்துக்கு தவிர்க்கமுடியாத விடயமாகிவிடுகிறது.

வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் எவை? பொதுவாகக் கூறினால், தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகள், அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்களையே நம்பி உள்ளன.

என்றாலும், வேலைக்கு எடுப்பவரின் கல்வித்தகுதிக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறது பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம். இந்த இடத்தில்தான் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கான அனுகூலமான நிலை (advantage) காணப்படுகிறது.

 இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகள் என குறிப்பிடும்போது, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா முதலான நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!