இதுவரை அமெரிக்காவில் பெண்கள் ஜனாதிபதியாகவில்லை! ஏன்?

#Election #America
Mayoorikka
1 month ago
இதுவரை அமெரிக்காவில்  பெண்கள் ஜனாதிபதியாகவில்லை! ஏன்?

அமெரிக்க ஜனதிபதியாக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனல்ட் டிரம்ப். இந்தநிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரிஸை மக்கள் தோல்வியடைய வைத்துள்ளனர்.

 இந்த நிலையில் பல சர்ச்சசைகளுக்கு உள்ளான ஒரு வர்த்தகரான டிரம்ப்பை மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுள்ளனர். இதற்கு என்ன காரணம் என நோக்கும் பொழுது அடிப்படையில் அமெரிக்கர்கள் ஒரு பெண்ணை இதுவரை காலமும் ஜனாதிபதியாக்கவில்லை. 

ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவை ஆட்சி செய்து வந்தது ஒரு ஆணாகவே இருந்திருக்கின்றார். 

அந்த அடிப்படையிலேயே கமலா ஹரிஷை அவர்கள் தோற்கடித்துள்ளனர். அமெரிக்கர்கள் உலக நாடுகளையே ஆதிக்கம் செலுத்தி ஆதிக்க வர்க்கமாக இருக்கும் இவர்களின் மனங்களில் ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்குவது கடிமனாக உள்ளது.

 இதுவரை காலமும் அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட விக்டோரியா ஹிலாரி கிளிண்டன், கமலா ஹரிஷ் ஆகியோர் தோல்வியையே சந்தித்திருந்தார்.

 அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களிற்கு மத்தியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 

அப்போதிருந்து பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். ஆனால் அன்றிலுந்து இன்று வரை ஒருவர் கூட தலைமைப் பதவியை ஏற்கவில்லை. 

 அமெரிக்கற்களை பொறுத்தவரையில் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்கள் மிகவும் திறமையானவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர். அரசியலில் பெண்களை காட்டிலும் ஆண் தலைவர்கள் மேன்மையானவர்கள் என அவர்கள் கருதுகின்றனர்.

 அத்துடன் பெண் வேட்பாளர்கள் தவறான தகவல்கலும் விமர்சனங்களாலும் குறி வைக்கப்படுகின்றனர்.

 இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் டொனால்ட் டிரம்புடன் போட்டியிட்ட பெண்களும் தோல்விகளை சந்தித்து இருந்தனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட கிளாரி கிளிண்டன் ட்ரம்பிடமிருந்து தோல்வியை தழுவினர். அதேபோல் 2024 இந்த ஆண்டும் ட்ரம்பிடமே கமலஹாரிசும் தோல்வியை தழுவியிருக்கின்றார். அவர் என்னதான் சர்ச்சசைக்களுக்கு உள்ளானாலும் அவர் ஒரு ஆண் என்பதால் அவரை தேர்தெடுத்திருக்கின்றார்கள்.

 இந்த நிலையிலே அமெரிக்கா என்னதான் ஜனநாயக நாடாக இருந்தாலும் பாலின வேறுபாடுகள் தற்பொழுதும் மக்கள் மத்தியில் இருந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதற்கு ஒரு சான்று தான் இந்த ஜனாதிபதி தேர்தல்.

 அதே நேரம் இலங்கை போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கூட பெண்கள் ஜனாதிபதியாக தலைமைத்துவம் வகித்திருந்தனர். ஆனால் ஆதிக்க நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் போன்ற   ஆதிக்க வர்க்க நாடுகளை பொறுத்தவரையில் பெண்கள் தலைமை வகித்ததில்லை இதுவரை காலமும்.

 ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை சுதந்திரம் மற்றும் பெண்ணுரிமை என மிகப் பெரிய ஜனநாயக நாடாக தன்னை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் தலைமைத்துவத்தில் பெண் தலைமைத்துவம் என்ற விடயத்தில் இப்பொழுதும் அமெரிக்கா பின் தங்கித் தான் இருக்கிறது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!