புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை - விஜித ஹேரத்!

#SriLanka
Dhushanthini K
9 months ago
புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை - விஜித ஹேரத்!

புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "பொதுவாக, மத்திய வங்கி கருவூல உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வழங்கும் முறை உள்ளது.

அந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒன்று. மேலும், பணம் வடிவமைத்தல் என்று வந்தால், புதிய பணம் வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதைச் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!