நாட்டில் மீண்டும் குறைவடைந்த முட்டை விலை!
#SriLanka
#Egg
Mayoorikka
9 months ago

கடந்த வாரத்தை விட உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (28) சிவப்பு முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவிற்கு வெள்ளை முட்டையின் விலை 35 ரூபாவிற்கும் விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு முட்டையை 41 ரூபாய்க்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்ய முட்டை உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.



