சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: குமார் குணரட்னம்
#SriLanka
#IMF
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் திட்டங்களை தற்போதைய அரசாங்கமும் முன்கொண்டு செல்லுமாயின் அந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
எனினும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கடந்த அரசாங்கத்தின் திட்டங்களை முன்கொண்டு செல்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.