கொழும்பு - கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்!
#SriLanka
#Train
Thamilini
1 year ago
கொழும்பு - கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவை இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் 10 மாதங்களுக்குப் பின்னர் யாழ்தேவி மற்றும் ரஜரட்ட ரஜின ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் யாழ்தேவி புகையிரதம் கொழும்பு கோட்டைக்கும் காங்கசந்துறைக்கும் இடையிலும், ரஜரட்ட ரஜின புகையிரத கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இண்டிபோலகே கூறுகிறார்.