வெடி பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது!
#SriLanka
#Arrest
Thamilini
1 year ago
வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதவிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) மாலை பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 01 போஸ்ட் பகுதியில், பதவிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காரை சோதனையிட்ட போது, கடத்தப்பட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற துப்பாக்கி, 90 ஜெலட்டின் குச்சிகள், 300 டெட்டனேட்டர் குச்சிகள் மற்றும் 05 சர்வீஸ் த்ரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 30 வயதுடைய ஹிடோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.