கொழும்பு - காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
Dhushanthini K
9 months ago

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வடக்கு ரயில்வேயில் ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் கடவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் கவனமாக கடவைகளை பயன்படுத்த வேண்டும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



