மின்சாரம் தாக்கி 06 வயது குழந்தை பலி!
#SriLanka
Thamilini
1 year ago
அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் தேஜான் தினுவர என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (25.10) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த குழந்தை எப்போதும் மின்சார பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்பக்கூடிய குழந்தை என தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த வேளையில் தாயும் தந்தையும் வீட்டில் வேறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் குழந்தை கிடப்பதைக் கண்டு வட்டுபிட்டிவல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.