எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

#SriLanka #Election
Dhushanthini K
9 months ago
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று : வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுவும் இன்று (26.10) போட்டியிடவுள்ளன. 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

48 வாக்குச் சாவடிகளில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனதேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 

 எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்புப் பணிகளுக்காக தமது அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

 இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!