இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் இருவர் பலி!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஹபராதுவ மிஹிபன்ன புகையிரத கடவைக்கு அருகில் மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தல்பே, மரதனகே வத்த பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி தற்போது காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை பேராதனை ரஜவத்தை பல்கலைக்கழக கூட்டுறவு சங்கத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கண்டி, அகவத்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.