பாணந்துறையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கும்பலால் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து!
#SriLanka
#Attack
Thamilini
1 year ago
முகத்தை மூடிக்கொண்டு வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த மூவர், அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பாணந்துறையில் இருந்து பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை மடுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வசித்து வந்த இரண்டு பெண்கள் இவ்வாறு தாக்கப்பட்டதில் அவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த இரண்டு பெண்களும் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.