சீன பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது!

#SriLanka #China #Arrest
Dhushanthini K
9 months ago
சீன பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது!

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தில் கணினி குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் சீனர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள். 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (24.10) மாலை பொபே வீதி, காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிந்தோட்ட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!