கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை!

#SriLanka #Gajendrakumar Ponnambalam
Thamilini
1 year ago
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரினால் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 இதேவேளை பருத்தித்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை