வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும்!
#SriLanka
Thamilini
1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகள் இன்று (24) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.