நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை : அநுர குமார!
#SriLanka
#Tamilnews
#AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்டாலும் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நேற்று அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்தேன். நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை. செயற்கை அரிசி தட்டுப்பாடு உருவாகிறது என தெரிவித்தோம்.
மில் உரிமையாளர்கள் புரிந்துணர்வுடன் செயல்படுகிறார்களா? சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறார்களா?
புரிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு 15,000 மானியத்தை 25,000 ஆக உயர்த்தியுள்ளோம். விளைநிலங்களுக்குச் செல்ல இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்." எனக் கூறியுள்ளார்.