கடன் பெற மாட்டோம் என பிரச்ச்சாரம் செய்த NPP தற்போது ஏன் கடன் பெறுகின்றது?

#SriLanka #AnuraKumara
Mayoorikka
1 month ago
கடன் பெற மாட்டோம் என  பிரச்ச்சாரம் செய்த  NPP தற்போது ஏன் கடன் பெறுகின்றது?

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட NPP கட்சியின் அனுரவினுடைய ஆட்சி ஆரம்பத்திலே அதிரடியாக சென்று கொண்டிருந்தது இப்பொழுது சற்று சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

 காரணம் அவர்கள் கடன் பெற மாட்டோம் என்ற பிரச்சாரத்தைச் செய்தார்கள் ஆனால் தற்பொழுது பல கோடி ரூபாய் கடனை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடனை பெற்றதற்கான காரணத்தை கூறுகின்ற பொழுது அவர்கள் ஏற்கனவே கடன் பெற்று தந்து கொண்டிருந்த கடனை பெற்றிருக்கின்றோம்.

 அதாவது சிபாரிசு செய்யப்பட்ட கடனை பெறுகின்றோம் இனிமேல் கடனை குறைத்துக் கொள்கின்றோம் என்ற தோரணையில் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

 அதே வேளையிலே சில வேளைகளிலே இந்த நாட்டின் நிலைமை கடன் பெற்றுத் தான் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்று நிலைமை வருமாக இருந்தால் பெற்றுக் கொண்டிருந்த கடனை வேண்டாம் என்று கூறினால் அவர்களிடம் மீண்டும் நாங்கள் சென்று கடன் பெற முடியாது அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வரையறையான கடனை மாத்திரம் அதனை சிறிதளவு பெற்று இருக்கின்றோம்.

 உலகத்தை அரவணைத்து செல்ல வேண்டும் கடன் கொடுத்தவர்களினை அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காக நாங்கள் அதை பெற்றிருக்கின்றோம் என்ற தோரணையிலே அவர்கள் பதில் கூறியிருக்கிறார்கள்.

 அதனை நாங்கள் சற்று உற்றுநோக்கி ஆழமாக பார்க்கின்ற வகையிலே இந்த நாடு இருக்கின்ற நிலையிலே தொடர்ந்தும் எங்களுக்கு கடன் தந்து கொண்டிருக்கின்ற தர ஆயத்தமாக இருக்கின்ற மற்றும் தர அனுமதித்த அவர்களிடம் நாங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டோமாக இருந்தால் மீண்டும் அவர்களிடம் செல்ல முடியாது என்பதற்காக ஒரு வரையறையோடு ஒரு சில ஒப்பந்தங்களோடு ஒரு தூர நோக்கோடு இந்த கடனை பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று அனுர தரப்பு கூறுகிறது. இது சரி தவறு என்பதை மக்களை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!