தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!
#SriLanka
#Tamilnews
Dhushanthini K
9 months ago

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (23.10) முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஏதேனும் சுகவீனம் அல்லது அவசியமான பணிகளுக்காக விடுமுறை எடுப்பது அவசியமானால், மாகாண பிரதி தபால் மா அதிபரின் ஒப்புதலுக்கு உட்பட்டு விடுமுறையை அங்கீகரிப்பது சாத்தியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்கு கையிருப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாக திரு.ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.



