அரிசி, பெற்றோல் மற்றும் முட்டைகளின் விலையேற்றங்களில் மாஃபியா! நடவடிக்கை எடுக்காத அனுர

#SriLanka #Food
Mayoorikka
1 year ago
அரிசி, பெற்றோல் மற்றும் முட்டைகளின் விலையேற்றங்களில் மாஃபியா! நடவடிக்கை எடுக்காத அனுர

அரிசி, பெற்றோல் மற்றும் முட்டைகளின் விலையேற்றங்களில் மாஃபியா இருப்பதாக தேர்தல் காலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், புதிய ஜனாதிபதி அது தொடர்பாக ஏன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அருணலு ஜனதா பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

 தற்போதைய அரசாங்கம், தேர்தல் காலத்தில் குறித்த மாபியாக்களை ஒழிப்பதாக தெரிவித்த கருத்துக்களை நம்பி, மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தற்போது அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த மாஃபியாக்களை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ள போதும், அவர் இதுவரை வரை எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

 அதுமட்டுமல்லாது ஜனாதிபதியாக அனுரகுமார வந்த பின்னரும் முன்பிருந்த விலைகளே நாட்டில் காணப்படுகின்றன, விலைகளை ஜனாதிபதி அவ்வாறே வைத்திருக்கிறார் என்றால் அவர் தேர்வாகியதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை