ஐஸ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்!
#SriLanka
#drugs
Dhushanthini K
9 months ago

250 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த இலங்கையரான இவர், 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



