அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி நிதி மோசடி! மக்களே அவதானம்
#SriLanka
#Crime
Mayoorikka
1 year ago
அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி, நிதி மோசடி இடம்பெறுவதாகவும், அது குறித்து பொதுமக்கள் அவதானமாக அருக்குமாறும், கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, CERTஇன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறுகையில், “50,000 ரூபாய் மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து, பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்தச் செய்திகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், இந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும்” என அவர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.