கல்வியும் ஒழுக்கமும் உள்ள அனைவருக்கும் தலைமைத்துவத்திற்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும்!
#SriLanka
#Chandrika Kumaratunga
#Politics
Thamilini
1 year ago
ஒரு குறிப்பிட்ட குழு நாட்டை 76 வருடங்கள் ஆட்சி செய்தாலே போதுமானது என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, புதிய குழுவொன்று ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
நேற்றிரவு இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், கல்வியும் ஒழுக்கமும் உள்ள அனைவருக்கும் தலைமைத்துவத்தை எடுப்பதற்கு கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்றார்.
புதிய குழுவானது கல்வியறிவு பெற்றவர்களாகவும், நிர்வாகத்தில் அறிவு மிக்கவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.
“இப்போது, நான் எனது நேரத்தை அரசியலில் செலவிடாமல் புதிய இளம் தலைவர்களை உருவாக்கவே செலவிடுகிறேன். நாங்கள் பல அமைப்புகளை உருவாக்கி புதிய தலைவர்களை உருவாக்கி வருகிறோம்,” என்றார்.